கிராஃபிக்ஸ்&மல்ட்டி மீடியா துறையின் எதிர்காலம்...!

கம்ப்யூட்டர் படித்த மற்றும் படித்துக்கொண்டிருக்கின்ற பெரும்பாலான இளைஞர்கள் இத்துறையில் வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும், அதனால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது போன்றும் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. கம்ப்யூட்டர் கல்வி என்பது வெறும் ஜாவா,ஆரக்கிள்,விஷுவல் பேசிக், சி++ போன்றவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அதைத்தவிரவும் விஷுவல் கம்யூனிக்கேஷன்,அனிமேஷன், வெப்டிசைனிங் போன்றவை உள்ளிட்ட மல்ட்டி மீடியா,கிராபிக்ஸ் துறைகளும் உள்ளன. நான் கிராஃபிக்ஸ் மற்றும் மல்ட்டி மீடியா துறையில் பல ஆண்டுகள் இருந்தவன் என்ற முறையில் இந்தத் துறையிலுள்ள பல்வேறு பிரிவுகள் குறித்தும், அவற்றிலுள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், அதைப்பெறுகிற வழிகள் குறித்தும், புதிதாக வரும் தொழில் நுட்பங்கள் பற்றியும் விரிவாக இந்த இணைத்தளத்தில் எற்றியுள்ளேன். கம்ப்யூட்டர் துறையில் பணி புரியும் பலரும் இன்றைக்குச் சொல்லும் குற்றச்சாட்டு என்னவென்றால் "இத்துறையிலுள்ள பணி வாய்ப்புகளெல்லாம் நிரப்பப்பட்டு விட்டன. இனி எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் படிப்பவர்களுக்கு சுலபத்தில் வேலை கிடைக்காது" என்பதுதான். ஆனால் இதைக் கேட்டெல்லாம் மாணவர்கள் பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. கம்ப்யூட்டர் துறையில் தற்போது ஏற்பட்டிருக்கும் மந்த நிலை தற்காலிகமானதே! மேலும் கம்ப்யூட்டர் இயக்குவதற்கான சாஃப்ட்வேர் வடிவமைப்பை கற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை தான் பெருமளவு கூடியிருக்கிறது. தவிர அன்றாடம் பயன்படுத்தக் கற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை மிகக்குறைவே. அதாவது, ஜாவா,விஷுவல்பேசிக்,சி++,ஆரக்கிள் போன்றவற்றைப் படித்தவர்கள் தான் அதிகரித்திருக்கிறார்கள். விளம்பரம், பத்திரிகை, தொலைக்காட்சி, அச்சகம், வெப்தளம், கல்வித்துறை என அனைத்துத் துறைகளிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தேவைப்படும் கிராஃபிக்ஸ் மல்ட்டி மீடியா போன்றவற்றைக்கற்றவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. மேற்சொன்ன துறைகள் மட்டுமல்லாது கிராஃபிக்ஸூம், மல்ட்டி மீடியாவும், பதிப்பகங்கள், பேக்கேஜிங், வீடியோ எடிட்டிங், வெப்தள வடிவமைப்பு, சிடி-ராம் உருவாக்கல் திரைப்படம் உள்ளிட்ட இன்னும் பல்வேறு துறைகளில் தினசரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரனத்திற்கு ஒரு நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அங்கு விசிட்டிங் கார்டு, லெட்டர் பேட் முதல் விளம்பரங்கள், வெப்தளங்கள், பயிற்சிக் கோப்புகள் என அனைத்தும் வடிவமைக்க வேண்டியிருக்கும். இதனை ஜாவா, ஆரக்கிள், படித்தவர்களை விட கிராஃபிக்ஸ் கற்றவர்களால் மட்டுமே செய்ய இயலும். ஒரு சில துறைகளில் உள்ள நிறுவனங்களில் மட்டுமல்ல.. அனைத்துத் துறைகளிலுமே இதுதான் நிலைமை. அடிப்படை சாஃப்ட்வேர் வடிவமைப்புப் பணிகள் நிறைவு பெற்று, அதனை இயக்குவதற்கு பயிற்சிபெற்ற கிராஃபிக்ஸ் வல்லுநர்கல் ஏராளமாகத் தேவை என்பதே இன்றைய யதார்த்த நிலை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதை தொகுத்து எழுதியவர்:


பெங்களுர் தமிழன் வி.ரமேஷ்


இ-மெயில் --- பெங்களுர்ரமேஷ்@ஜிமெயில்.காம்


மொபைல்:0-9343567082.